போலிச் செய்திகள் மீதான விழிப்புணர்வு; பொறுப்புள்ள இலக்கவியல் குடிமகன் என்றால் என்ன?

இப்போது, இலக்கவியல் உலகில் உள்ள எவரும் தங்கள் கருத்துகளைக் கூறவோ, கதைகளைப் பகிரவோ சுதந்திரமாக உள்ளனர். இதனால் போலிச் செய்திகள் அதிகமாகப் பரவுதல் உட்பட பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளைக் கொடுப்பது போன்ற சிக்கல்களும் நாட்டில் அடிக்கடி நிலவி வருகின்றன.

எனவே, பொறுப்பான இலக்கவியல் மக்களை உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்தக் கொள்கை ஒவ்வோர் இலக்கவியல் குடிமகனும் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்துவதையும் உண்மையான உலகத்தில் பொறுப்புடன் வாழ்வதையும் ஊக்குவிக்கிறது.

எடுத்துக்காட்டாக, இலக்கவியல் குடிமக்கள் எதிர்நோக்கவிருக்கும் விளைவுகளைப் பற்றிசிந்திக்காமல் சுதந்திரமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்புகின்றனர். நெறிமுறைகள், உயர்நெறிகளை மீறாத, பாதுகாப்பான இணைய வெளியை உருவாக்க, பொறுப்பான இலக்கவியல் குடியுரிமையை உருவாக்க வேண்டிய அவசியம் இங்கே உள்ளது.

ஒரு பொறுப்பான இலக்கவியல் குடிமகனாக இருப்பது என்பது தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவது, பொய்யான செய்திகள் போன்ற உண்மைக்குப் புறம்பான உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடாது என்பதாகும். பரப்பப்படும் போலிச் செய்திகள் சமூகத்தின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும், இது இறுதியில் மக்களிடையே சினத்தை ஏற்படுத்தி விடும் அதேவேளையில், ஒருவருக்கொருவரிடையே மோதலுக்கும் வழிவகுத்து விடும்.

உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல்களைப் பரப்பும் இந்தச் செயல் புதிதல்ல. இது நாட்டில் நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. இதனால் தனிநபர்களுக்கிடை யிலான உறவுகளைப் பாதிக்கும் அதேவேளையில், இது தொடர்ந்து நீடித்தால் நாட்டின் நிதி உட்பட பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மேலும், விவேகக் கைப்பேசி தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் இணையத்தின் வேகமும் இன்று பொதுமக்களின் புதிய பழக்கத்திற்கு வழிவகுத்து, தவறான தகவல்களை அல்லது போலி செய்திகளைப் பரப்பி தனிநபர்களின் நற்பெயருக்கும் அரசாங்க வளங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது சமூகவலைத்தளம் என்பது தகவல் பரிமாற்றம் உட்பட தவறான தகவல்களைப் பரப்புவது இன்றைய சமூகத்தின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்வில் ‘புதிய போக்காக’ மாறி வருகிறது.

இன்று சமூகத்தில் பிரபலமாக இருக்கும் சமூகவலைத் தளங்களில் முகநூல், இன்ஸ்டா கிராம், புலனம், வீசாட், டுவிட்டர், டிக்டோக், யூடியூப் ஆகியவை முக்கியம் வாய்ந்துள்ளன.

தனிநபர்கள், குடும்பங்கள், சமூகம் உட்பட நாட்டிற்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் உண்மையற்ற, தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த சமூகவலைத்தளங்கள் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தவறான, போலிச் செய்திகள் பெரும்பாலும் மோசடி, இன உணர்வுகளைத் தூண்டுதல் உட்பட ஒருவர் மீது வீண்பழி போடும் வேளையில், அவரின் கண்ணியத்திற்கும் புகழுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இது மிகவும் கவலைக்குரியது. காரணம் பரப்பப்படும் தகவல் உண்மையல்ல என்றால், அது சம்பந்தப்பட்ட நபர்களை மேலும் அவமானப்படுத்தலாம். இது தனிநபர் அல்லது அமைப்பின் நற்பெயரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ரிங்கிட், பணத்திற்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதற்கு சமூகத்திற்குத் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் வழிவகுத்து விடும்.

 

உண்மையில், சமூகவலைத்தளம் மூலம் தகவல், செய்திகள் பரப்புவது எல்லைகள், அதன் தன்மை அறியாமல் ஒரு நொடியில் பொதுமக்களின் அறிவைச் சென்றடையும். தவறான தகவல்களும் பொய்யான செய்திகளும் பொதுவாக மக்களைக் குழப்பமடையச் செய்வதும் தவறாக வழிநடத்துவதும் தான். சமூகவலைத்தளங்கள் பொய்யான தகவல்களைப் பரப்புவது பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இந்நாட்டிலுள்ள பல இன மக்களின் ஒற்றுமைக்கு எந்த வகையிலும் நன்மையை ஏற்படுத்தித் தராது என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் பொய்யான, போலியான தகவல்கள் பரப்புவது நகைச்சுவையாக மாறக்கூடாது. காரணம் அது விரைவாகப் பரவி சமூகத்தினரிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். இணையத்தில் இருக்கும் போது நல்ல இலக்கவியல் நெறிமுறைகள் மிகுந்த நடத்தையைப் பின்பற்ற வேண்டும். எதிர்காலத்தில் உங்களுக்கு துரதிர்ஷ்டம் வராமல் இருக்க எப்போதும் பேச்சில் விழிப்புடன் இருங்கள். கெட்ட வார்த்தைகளைப் பேசினால், அது வாழ்க்கைப் படகை பின்னுக்குத் தள்ளும் என்பதும் பழமொழி.

அவதூறு, தவறான தகவல்களைப் பரப்பாத வரை மக்கள் தங்கள் கருத்துகளை வெளியிடச் சுதந்திரமாக உள்ளனர். மக்களும் புத்திசாலித்தனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள், பின்னர் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.

உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது போன்ற கடுமையான நடவடிக்கையை
அரசு எடுத்தாலும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் இன்னும் பரவலாகப் பரப்பப்பட்டு வருதை மறுக்க முடியாது. இறுதியில், போலிச் செய்திகள் பரவுவதைக் கையாள்வது உட்பட பொதுமக்களின் அக்கறையை உருவாக்க திட்ட மிட்டுச் செயல்படுவது எளிதான காரியம் அல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை.

இதனைத் தவிர்த்து, பொறுப்பான இலக்கவியல் குடிமக்களாக மாறுவதற்கு நமது பங்களிப்பு தேவைப்படும் இடங்களில் ஒன்றாக சமூகவலைத் தளம் விளங்குகிறது. இது அனைத்து கோணங்களிலும் பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது. உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத தகவலும் உள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்கள் தற்போது பல்வேறு போலிச் செய்திகளால் வெடிக்கும் போது, சமூக மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது. இது நாட்டின் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும்.

மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) சமூக ஊடகங்கள், குறுந்தகவல் பயன்பாடுகள் மூலம் பரவி வரும் போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடி வருகிறது. 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டத்தின் 211, 233ஆவது பிரிவின் கீழ் குறுந்தகவல் (SMS) அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக போலிச் ஙெ்ய்திகளைப் பரப்புவது ஒரு குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு 50,000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பரப்பப்படும் தகவல், செய்தி தவறானதா, இல்லையா என்பதைக் கண்டறிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதனை அடையாளம் காண்பது எங்களின் முயற்சியில் அடங்கியுள்ளது. இம்முயற்சியானது நாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஒரு பொறுப்புள்ள, செயலாக்கமுள்ள, உயர்நெறிமுறையான சமுதாயமாக மாற நமக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

உதாரணத்திற்கு, அரசு, அதன் ஏஜென்சிகள் தொடர்பான இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் தகவல்களை முதலில் சரிபார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இணையதளம், சமூகவலைத்தளங்களின் உள்ளடக்கம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயனீட்டாளர்கள் (MCMC) எனப்படும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட sebenarnya.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது புகார் அளிக்கலாம். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, sebenarnya.my அகப்பக்கம் மொத்தம் 2,862 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

போலிச் செய்திகளைப் பின்பற்றுதல், பரப்பப்படும் தகவல்களின் விளக்கங்கள், ஏமாற்று வேலை, இணைய மோங்டி உள்ளிட்ட தகவல்களைப் பரவுவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here