ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான முறையான அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட மொத்தம் 24 டன் உறைந்த பன்றி இறைச்சியை, மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை (மாகிஸ்) கைப்பற்றியது.
கடந்த புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு வழக்கமான ஆய்வின் போது, இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த பன்றி இறைச்சிக்கு இறக்குமதி அனுமதி இல்லை என்று கண்டறியப்பட்டது என்று, மாகிஸ்ஸின் சிலாங்கூர் மாநில இயக்குனர், முகமட் சோப்ரி முகமட் ஹாஷிம் கூறினார்.
“அதைத் தொடர்ந்து, RM180,000.00 மதிப்புள்ள 24 டன்கள் என மதிப்பிடப்பட்ட அனைத்து உறைந்த பன்றி இறைச்சியும் மேல் நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மாகிஸ் இறக்குமதி அனுமதியில் அமைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறிய செயல், பிரிவு 15(1), மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 இன் படி குற்றமாகும், இது பிரிவு 15(2), அதே சட்டத்தின் படி தண்டனைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.









