அடுத்த ஆண்டு 120,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பிலிப்பைன்சுடன் இணைந்தது மலாக்கா

அடுத்த ஆண்டு 2024 விசிட் மலாக்கா ஆண்டுடன் இணைந்து, மலாக்கா மாநில அரசாங்கம் 80 ஃபிலிப்பைன்ஸ் பயண முகவர் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அந்நாட்டிலிருந்து சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

மே 21 முதல் 26 வரை மணிலா மற்றும் தாவோவில் சுற்றுலா பிரச்சாரத்தின் மூலம் இது மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுற்றுலா, பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் கூறினார்.

பிலிப்பைன்ஸிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பயண நிறுவனங்களுக்கு, மாநிலத்தில் உள்ள தொழில்துறையினர் மூலம் பல்வேறு கவர்ச்சிகரமான சுற்றுலா சலுகைகள் வழங்கப்படும் என்றார்.

2024 ஆம் ஆண்டிற்கான மலாக்காவிற்கு சுமார் 8.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற இலக்கை அடைய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன், புருனே மற்றும் இந்தோனேசியாவிற்கும் சுற்றுலாப்பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் பிரச்சாரங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அப்துல் ரசாக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here