கர்ப்பிணி காதலியை கொலை செய்து, தீ வைத்த நபரின் விளக்கமறியல் நீட்டிப்பு

சுங்கை பெசார், கம்போங் சுங்கை லிமாவ்வில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த தனது காதலியை கொலை செய்து, எரித்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் விளக்கமறியல், வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோலா சிலாங்கூர் மாவட்ட நீதிமன்றம், இன்று இந்த விளக்கமறியல் நீட்டிப்பு உத்தரவை வழங்கியதாக சபாக் பெர்னாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், அகஸ் சலீம் முகமட் அலியாஸ் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்படி வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால், இன்றுடன் முடிவடைந்த அவரது தடுப்புக் காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

சந்தேகநபர், போலீஸ் அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ், காலை 8.10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்ட அகஸ், ஊகங்களை பரப்புவது, நடந்து வரும் விசாரணையில் தலையிடவே செய்யும் என்றும் வலியுறுத்தினார்.

ஊகங்கள் பரப்புபவர்களுக்கு எதிராக “தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ், தனிநபர் மீதான விசாரணை ஆவணங்களைத் திறக்க காவல்துறை தயங்காது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here