லோரி மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய சாலை விபத்தில் முதியவர் பலி

குவா மூசாங், பத்து 5 இல் உள்ள குவா மூசாங்-கோலக் கிராய் சாலையின் 8 ஆவது கிலோமீட்டரில் நேற்று நடந்த சாலை விபத்தில், ஒரு முதியவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 73 வயதான இஷாக் மூசா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் குவா மூசாங்கின் திசையில் இருந்து கோலக் கிராய் நோக்கி SM Sport 110E ரக மோட்டார் சைக்கிளில் சென்றது கண்டறியப்பட்டது.

அவரது கூற்றுப்படி, சம்பவத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர் சாலையின் இடதுபுறத்தில் நின்று, பின்னர் மெதுவாக பிரதான சாலையில் நகர்ந்ததாக நம்பப்படுகிறது. இதன்போது பின்னால் வந்த லோரி பாதிக்கப்பட்டவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் மோடியதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர் சாலையில் தூக்கி எறியப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வேலையற்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 23 வயதான லோரி ஓட்டுநர் காயமடையவில்லை என்றும் சூன் ஃபூ கூறினார்.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here