நிர்வாணமாக இந்து ஆலயத்திற்குள் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு

பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள்.

அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள் உள்ளன. அங்கே சுற்றுலாப் பயணிகள் பலரும் விசிட் செய்யும் பகுதியான பாலியில் இந்து கோயில்களும் அமைந்துள்ளன. இதைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் அங்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஜெர்மனி சுற்றுலாப் பயணி:

இதற்கிடையே பாலியில் உள்ள ஒரு கோயிலில் திடீரென ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆட தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த இந்தோனேசிய போலீசார் அவரை மனநல சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

அந்த பெண் 28 வயதான தர்ஜா துஷின்ஸ்கி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிக்கப் பாலி சென்ற அவர் ஹோட்டல் கட்டணத்தையும் செலுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

தெற்காசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் சமீப காலமாக இதுபோல சுற்றுலா பணிகள் மோசமாக நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. பொது இடங்களில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே அங்கே பல வெளிநாட்டுப் பயணிகள் நாடு கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

என்ன நடந்தது:

இந்தச் சூழலில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. பாலியில் தங்கப் பணம் இல்லாததால் அந்த பெண் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது தான் அவர் திடீரென இந்து கோயிலில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆடைகளைக் களைந்தது மேடைக்கு ஏறியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பல்வேறு படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. இதில் உபுடில் உள்ள சரஸ்வதி கோயிலில் நடனக் கலைஞர்கள் நடனமாடும் போதும் திடீரென நிர்வாணமாக அந்த பெண் மேடை ஏறியுள்ளார்.

மேலும், சன்னதிக்கு உள்ளேயும் நிர்வாணமாக நுழைய முயன்றார். இருப்பினும், அதற்கு போலீசார் அவரை கைது செய்துவிட்டனர். அந்த பெண் கோயிலில் நடந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வந்துள்ளார்.

அப்போது திடீரென அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த பெண் ஆடைகளைக் களைந்து இப்படிச் செய்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here