வறண்ட காலங்களில் தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க, தண்ணீர் பம்புகள் மற்றும் குழாய் கிணறுகளை அமைக்க கூடுதலாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்வதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) அறிவித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
“வெப்பமான வானிலை நெற் சாகுபடியை பாதிக்காத வகையில் நாங்கள் தண்ணீர் பம்புகளை தயார் செய்கிறோம்,” என்று அவர் கம்போங் குபாங் தெலாகாவில் உள்ள நீர் பம்புகளை சரிபார்த்த பின்னர், நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
“வெப்பமான காலநிலை காரணமாக கிளாந்தான் ஆறு தொடர்ந்து வறண்டு போகிறது மற்றும் கெமுபு பம்ப் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 16,113 ஹெக்டேர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை.
“இந்தாண்டு ஜனவரி தொடக்கத்தில் பயிரிடப்பட்ட நெல்லை மே அல்லது ஜூன் மாதங்களில் அறுவடை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.









