சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வியட்நாமிய படகு தடுத்து வைப்பு; 20 பேர் கைது

மலேசிய கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வியட்நாமிய மீன்பிடி படகு மற்றும் பணியாளர்கள் 20 பேர், மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் திரெங்கானு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மொத்தம் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை மதியம் 1.20 மணியளவில் கோலா திரெங்கானு முகத்துவாரத்தில் இருந்து 116 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக குறித்த படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக திரெங்கானு கடல்சார் கேப்டன் கைருல் நூர் அப்துல் மஜித் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 20 பணியாளர்களும் 18 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களிடம் சரியான அடையாள ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here