கோலாலம்பூர்:
கோலா கெட்டில், கம்போங் பாடாங் பெசார் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில், ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவரால், முழு ஆடைகளுடன் கூடிய, மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
எலும்புக்கூட்டின் அருகில், ஒரு கத்தியும், அதன் அருகே, ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தன.
காவல்துறையினர், இந்த எலும்புக்கூடு, காணாமல் போன ஒருவரின் புகாருடன் ஒத்துள்ளது என்று உறுதிப்படுத்தினர். காணாமல் போன நபரின் மனைவி, தனது கணவர், சில நாள்களாக வீடு திரும்பாததால், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, புகார் அளித்திருந்தார்.
பின்னர், அந்தப் பெண்ணும், அவரது வளர்ப்பு மகனும், இறந்தவரின் ஆடைகள், மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல், சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையினர், இந்தச் சம்பவத்தை, திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, தகவல் அறிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




















