டெலிகிராமுக்கு எதிரான நடவடிக்கை பயனர்களை அதிகம் பாதிக்காது என்கிறார் ஃபாஹ்மி

டெலிகிராம் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அதன் பயனர்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் ஊடகப் பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் வீடியோ மற்றும் படப் பரிமாற்றத்திற்காக இந்தப் பயன்பாட்டை பரவலாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை அமைச்சகம் அறிந்திருப்பதாக ஃபாஹ்மி கூறினார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் டெலிகிராமுக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், அதன் நிர்வாகம் இன்னும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்காததால், பயன்பாட்டின் உள்ளடக்கம் மற்றும் தவறான பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளை இதுவரை விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“எனவே டெலிகிராமின் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு மிகவும் சாதகமானதாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டால், எந்த நடவடிக்கையும் பயனர்களை அதிகம் பாதிக்காது இருப்பதை என்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here