தீபகற்ப மலேசியா மற்றும் சபாவில் உள்ள நான்கு பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) முதல் நிலை வெப்பமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகள் பெந்தோங், தெமெர்லோ மற்றும் குவாந்தான், பகாங் என்பவையாகும், அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு சபாவின் கினாபடாங்கான் பகுதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“எச்சரிக்கை நிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு இருக்கும் என்றும், இது தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும்” வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








