பெட்டாலிங் ஜெயா: பணத்தை வீணாக்கியதற்காக மனைவி திட்டியதால், தன்னைத் தானே வெட்டிக் கொண்ட நபரின் முழு மருத்துவ அறிக்கைக்காக போலீசார் இன்னும் காத்திருக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய நபருக்கு அதிகமாகச் செலவழிக்கத் தூண்டும் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்று கேட்டபோது, பெட்டாலிங் ஜெயா OCPD முகமட் ஃபக்ருதீனை புதன்கிழமை (ஜூன் 7) தொடர்பு கொண்டபோது, மருத்துவ அறிக்கைக்காக காவல்துறை இன்னும் காத்திருப்பதாகக் கூறினார்.
அந்த விஷயம் இன்னும் விசாரணையில் உள்ளது. முழு மருத்துவ அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் கூறினார். அந்த குடும்பம் பணக்கார குடும்பம் அல்ல என்றும், இந்த விவகாரத்தில் அந்த நபர் தனது மனைவியால் திட்டப்படுவது இது முதல் முறையல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆடம்பர கைக்கடிகாரம் வாங்கியதற்காக ஒருவர் திட்டியதால் கண்ணாடித் துண்டால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டதாக முன்னர் செய்தி வெளியானது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கானை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா, ஜூன் 5 அன்று டாமன்சாராவில் ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவித்தது.
விலையுயர்ந்த கொள்முதல் தொடர்பாக அந்த நபரின் மனைவி அவரைத் திட்டியதால், கண்ணாடி குடுவையை உடைத்துள்ளார். பின்னர் கண்ணாடி துண்டால் கை மற்றும் கழுத்தை அறுத்துள்ளார். அந்த நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், முன்பு தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதாக மிரட்டியதாகவும் ஹுசைன் கூறினார்.
காயமடைந்த பகுதிகளுக்கு தையல் போடப்பட்ட நிலையில் அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.








