சனுசியின் சர்ச்சைக் கருத்துக்கு கெடா பாஸ் ஆதரவு

கெடா மந்திரி பெசார், டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் வெளியிட்ட “பினாங்கு கெடாவுக்கு சொந்தமானது” என்ற அறிக்கைக்கு கெடா -பாஸ் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பினாங்கு மீதான கெடாவின் உரிமை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும், இது வலுவான ஆராய்ச்சி ஆதரவைக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது என்று, பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர், டத்தோ அகமட் யஹாயா கூறினார்.

எனவே, ‘இந்த விஷயம் தொடர்பான வரலாற்றுக் கதையை பாதுகாக்கும் நடவடிக்கை ஒரு குற்றச் செயல் அல்ல என்றும், தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் அதை தேசத்துரோகமாக வகைப்படுத்த எந்த அவசியமும் இல்லை’ என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பிரச்சினையை பிரதமர் தொடர்ந்து அரசியலாக்கக் கூடாது. கடந்த 15வது பொதுத் தேர்தலில் (GE15) பக்காத்தான் ஹராப்பான் (PH) பெற்ற பெரும் தோல்விக்கு பழிவாங்கும் வகையில், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கெடா மீது வீசப்பட்ட விமர்சனங்களும் அழுத்தங்களும் உருவாகின்றன.

உண்மை என்னவென்றால், அவர்கள் வரலாற்றைப் பற்றி விவாதிப்பதை விட கெடாவின் மந்திரி பெசாரைக் கீழே வீழ்த்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here