வெப்ப அலையின் எதிரொலி ; மலேசியாவில் மழைவீழ்ச்சி குறையலாம் – நிக் நஸ்மி

கடந்த சில வாரங்­க­ளாக நாடு கடுமையான வெப்ப அலையை எதிர்­கொண்டு வருகிறது. ஜூன் முதல் வலுவிழந்த ‘எல் நினோ’ பரு­வ­நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்­நோக்கக்­கூ­டும் என்று இயற்கை வளம், சுற்­றுப்­புற, பரு­வ­நிலை மாற்ற அமைச்­சர் நிக் நஸ்மி நிக் அக­மட் தெரி­வித்தார்.

மேலும் நவம்­ப­ர் மாதத்திற்குள் இந்த வானிலை நிகழ்­வின் தீவி­ரம் மித­மான அளவை எட்­டக்­கூ­டும் என்­றார் அவர். இத­னால், மழை பெய்­வது 20 முதல் 40 விழுக்­கா­டு­வரை குறை­யக்­கூ­டும் என்றார்.

‘எல் நினோ’ வானிலை மாற்றத்தால் ஏற்­படும் சில விளை­வு­கள், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்­ரல் மாத­வாக்­கில் தென்­ப­டக்­கூ­டும் என்று அவர் நாடா­ளு­மன்­றத்­தில் கூறினார்.

தொடர்ந்து சில நாட்­க­ளாக வெப்­ப­நிலை 38 டிகிரி செல்­சி­யசைத் தாண்­டும் என்றும் கடு­மை­யான வெப்ப அலை ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இது­வரை இல்லை என்று நிக் நஸ்மி கூறி­னார்.

“என்­றா­லும், வழக்­க­மான வெப்­ப­நி­லை­யை­விட சற்று கூடு­தல் வெப்­ப­நிலை நாட்டில் பதி­வாகக்­கூ­டும். அந்த அதி­க­ரிப்பு 0.5 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 1 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும்,” என்­றும் அவர் கூறினார்.

‘எல் நினோ’ நிகழ்­வால் ஏற்­படும் வெப்­ப­மான, வறண்ட வானிலை ஆசி­யா­வில் எங்­கும் உணவு உற்பத்தியாளர்க­ளுக்கு மிரட்­ட­லாக அமை­கிறது. அதுபோல மலே­சி­யா­ உட்பட இந்­தோ­னே­சி­யா­வி­லும் செம்பனை எண்ணெய், அரிசி உற்பத்தி பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here