கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கான உள்நாட்டு மற்றும் அனைத்துலக அஞ்சல் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் திறக்கப்படும்.
அனைத்துப் பிரிவினருக்கும் அஞ்சல் மூலமாக வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், அதாவது 1A வகை பாரத்தை EC அதிகாரிகள், தேர்தல் ஊழியர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் ஆகியோரும்; 1B வகை பாரத்தை வெளிநாட்டில் உள்ள மலேசியர்களும்; மற்றும் 1C வகை பாரத்தை ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்களும் https://myspr.spr.gov.my என்ற அகப்பக்கத்தின் மூலம்க விண்ணப்பிக்கலாம் என்று, தேர்தல் ஆணையச் செயலர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்.
“இருப்பினும், காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள், ஜூன் 15 முதல் https://www.spr.gov.my என்ற தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய படிவம் 1A வகை பாரத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
குறித்த பாரங்களை வரும் 2023ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தொடங்கி www.spr.gov.my என்ற அகப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தங்களின் துறைத் தலைவரின் அனுமதியைப் பெற்று தேர்தல் பிரிவு நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அஞ்சலி வழி வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை செய்வதற்கு முன்னர், தகுதிபெற்ற வாக்காளர்கள் MySPR கணக்கைக் கொண்டிருப்பதோ அல்லது பதிவு செய்தோ இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“உள்நாட்டு மற்றும் அனைத்துலக அஞ்சல் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களுக்கான இறுதி தேதிகள் உட்பட முக்கியமான தேதிகளை நிர்ணயிப்பதற்கான சிறப்பு கூட்டத்திற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவிற்கு வெளியே உள்ள வாக்காளர்களுக்கு தபால் மூலமான வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்காக, தேர்தல் ஆணையத்தில் பதிவில் உள்ள வெளிநாட்டு முகவரியைச் சரிபார்ப்பதற்கும், அவர்கள் மலேசியாவுக்குச் சென்றாலோ அல்லது திரும்பியிருந்தாலோ அவர்களின் முகவரியைப் புதுப்பிக்கவும் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
மேலதிக தகவல் பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தை 03-8892 7218 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக ஜூன் 23-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம்.
ஏதேனும் தகவல் அல்லது கூடுதல் விளக்கத்திற்கு, 03-8892 7218 அல்லது 03-8892 7200 என்ற எண்ணில் தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.