சிரம்பானில் நீர்க் குழாய் மாற்றும் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அடுத்த வாரம் ஜூன் 13 ஆம் தேதி காலை 8 மணி முதல் 24 மணி நேரம் சிரம்பானின் பல பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று நெகிரி செம்பிலான் நீர் வழங்கல் நிறுவனம் (Sains) தெரிவித்துள்ளது.
நீர்க் குழாய்கள் மாற்றும் பணி முடிந்ததும், படிப்படியாக நீர் விநியோகம் சீரமைக்கப்படும், என்று சைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீர் தடையால் பாதிக்கப்படும் பகுதிகளில் சிரம்பான் நகரம், லோபக், ஜாலான் டாக்டர் சென் மன் ஹின் (ஜாலான் தெமியாங்), ஜாலான் டெம்ப்ளர், லேக் கார்டன்ஸ், ஜாலான் டத்தோ கிளானா மக்மூர், புக்கிட் தெம்போக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான மாநில நீர் வழங்குநர்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக குழாய் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சைன்ஸ் தெரிவித்துள்ளது.
பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைய அதிக நேரம் எடுத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயின்ஸ் தண்ணீர் டேங்கர்களை அனுப்பும் என்றும் நிலையான நீர்த் தொட்டிகளை நிறுவும் என்றும் அது கூறியுள்ளது.
மேலதிக தகவலுக்கு 1 800 88 6982 ஐ அழைக்கலாம் என்றும் அது அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.









