”தற்கொலை செய்ய தடை”- வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் புதிய உத்தரவு

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டு மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதுடன், அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்துவதன் காரணமாக அமெரிக்கா, உள்ளிட்ட உலக நாடுகள் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதித்தன.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் ஒரு புதிய உத்தரவிட்டுள்ளார். அதில், ‘’நாட்டின் தற்கொலை செய்வது கம்யூனிசத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதால், இனி யாரும் தற்கொலை செய்யக்கூடாது ‘’என்று புதிய உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு கொரியன் சீரிஸ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களை பார்த்த 2 உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here