பிரச்சனை தீர்ந்தது, அம்னோவிடம் டிஏபி மன்னிப்பு கேட்க தேவையில்லை: ஜாஹிட்

பல ஆண்டுகளாக அம்னோ மீது தாங்கள் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, நேற்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் இந்த விஷயம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சியுடன் ஏற்கனவே தீர்த்து வைக்கப்பட்டுள்ளதால் மேலும் மன்னிப்பு கேட்க டிஏபியை தள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நேற்று அம்னோ கட்சிப் பிரிவின் பொதுச் சபையின் போது செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜாஹிட், அம்னோ இளைஞர் தலைவர் முகமட் அக்மல் சாலேவின் கூற்றுக்களை நிராகரித்தார், இரு கட்சிகளும் போட்டியாக இருந்தபோது குரல் கொடுத்த கண்டனங்களுக்கு அம்னோவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இனியும் நாம் குரல் எழுப்பக்கூடாது. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினையை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

“ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான விவாதங்களின் போது, டிஏபி அம்னோவிற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு மன்னிப்பு கேட்பது நாங்கள் நிர்ணயித்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும், மேலும் அவர்கள் 100% ஒப்புக்கொண்டனர்,” என்று அக்மலின் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்தபோது துணைப் பிரதமர் கூறினார்.

மேலும் தற்போது நிலையாக இருக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை குறைக்கும் வகையில், அம்னோவின் எந்தவொரு உறுப்பினர்களும் கருத்துக்களை வெளியிடவேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here