நடிகை லாவண்யாவின் நிச்சயதார்த்தம்

சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், லாவண்யா திரிபாதி. இவரும், தெலுங்கு நடிகர் வருண் தேஜூம் காதலித்து வந்தனர். இருவரும் ‘மிஸ்டர்’, ‘அந்தாரிக்சம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

அப்போது காதல் மலர்ந்தது. வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. வருண் தேஜின் தந்தையும், நடிகருமான நாகபாபு, “திருமண விஷயத்தை வருண் தேஜே அறிவிப்பார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் தனி குடித்தனம் சென்றுவிடுவார்கள்”, என்று கூறியிருந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் நேற்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here