பினாங்கு சுங்கத்துறையினரால் 1.4 கிலோ ஹெரோயின் பறிமுதல்

RM132,000க்கு மேல் மதிப்புள்ள 1.4 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பினாங்கு சுங்கத் துறையினர் வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

ஜூன் 6 ஆம் தேதி மாலை 3.36 மணியளவில் பத்து மாங்கில் உள்ள விமான நிலைய சரக்கு வளாகத்தில் நடந்த சோதனையின் போது, ஆர்கானிக் உணவுப் பொருளாக அறிவிக்கப்பட்ட இந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் மாநில இயக்குநர் ஹமிசன் கலிப் தெரிவித்தார்.

ஒரு பிரபல கூரியர் நிறுவனத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த சந்தேகத்திற்கிடமான பொட்டலம் குறித்து, அதன் அமலாக்கப் பிரிவில் இருந்து மாநில சுங்க போதைப்பொருள் பிரிவுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

குறித்த பொட்டலத்தில் “பால் பவுடர் போல் இருப்பது போல், ‘ஆர்கானிக் மீல் ரீப்ளேஸ்மென்ட்’ என அறிவிக்கப்பட்டது என்று, நேற்று (ஜூன் 9) பினாங்கு சுங்கத் திணைக்கள வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பொருளைப் பரிசோதித்ததில் அது ஹெரோயின் என்பது கண்டறியப்பட்டது என்று ஹமிசன் கூறினார்.

இந்த போதைமருந்துகளின் மதிப்பு ரிங்கிட் 132,375 என்றும், இதுவரையில் இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை ஆனால் ஏற்றுமதி செய்ய பொருட்களை வழங்கிய சந்தேக நபரை கண்காணிப்பு கேமரா மற்றும் பார்சலின் முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் சுங்கத்துறை அடையாளம் கண்டுள்ளது என்றார்.

மேலும் இந்த வழக்கு ஆபத்தான மருந்து சட்டங்கள் 1952 பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் ஹமிசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here