பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர்கள் பினாங்கு மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார்கள், எனவே அவர்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளுமாறு பினாங்கு வாசிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகக் கூறிய அன்வார், மாநிலம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க பினாங்குக்கு கூட்டரசு அரசாங்கம் தொடர்ந்து உதவி செய்யும் என்றும் கூறினார்.
“ பினாங்கு மக்கள் திறமையான தலைவர்களுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை நான் இங்கு விளக்க விரும்புகிறேன், இதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், அன்வார் தலைமை தாங்கினால், மலாய்க்காரர்களின் முடிவு மோசமாகும் என்றும் அனைத்து மதப் பள்ளிகளும் மூடப்படும் என்று அவர்கள் கூறினர்.
“அன்வார் பிரதமரானால் இனி ஹிஜாப் அணிய முடியாது என்று பிரச்சாரத்தின் போது சொன்னார்கள். அவர்கள் இப்போது என்ன அணிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
“எனவே பினாங்கு தொடர்ந்து வலுவாக இருக்க, தொடர்ந்தும் சிறந்த பக்காத்தான் தலைமைகளுக்கு வாய்ப்பளியுங்கள் ” என்று இன்நேற்று இரவு சந்தை தளத்தில் பாலிக் பூலாவ் குடியிருப்பாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் கூறினார்.
நாட்டின் நிர்வாக விவகாரங்களில் டிஏபியின் விருப்பத்திற்கு அடிபணிந்ததாகக் கூறப்படும் கருத்தை மறுத்த அன்வார், குறிப்பிட்ட தரப்பினர் கூறுவது போல் தன்னை எவராலும் ‘வாங்க’ முடியாது என்றும் கூறினார்.
“ஆம், டிஏபி எங்கள் நண்பர், நாங்கள் அவர்களுக்கு பதவிகளை மட்டுமே தருகிறோம், ஆனால் இன்னும் யார் முதலாளி என்பதை நினைவில் வையுங்கள்…” என்றார்.
அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர், அவர் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு, அமைச்சரவையில் (முன்மொழிவுகளை) கொண்டு வருகிறார், பிரதமர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அவற்றை செயல்படுத்த முடியும். அன்வாரை யாரும் வாங்கமுடியாது, அது சாத்தியமில்லை,” என்றார்.
இதற்கிடையில், மலேசியாவின் சீர்திருத்த முயற்சிகளை தனது முழு பலத்துடன் தொடர்வதாக அன்வார் கூறினார்.









