பிரபாஸ் பிறந்தநாளில் பால் ஊற்றி கொண்டாட்டம்

பான் இந்தியா நடிகரான பிரபாஸ், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண் டாடுகிறார். ரசிகர்களால் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபாஸ், கடந்த 2002ஆம் ஆண்டில், ஈஸ்வர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கு நடிகராகவே அறியப்பட்ட பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம், பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பிரபாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாக நடிக்கிறார்.

இப்படம் ’கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று சமூக வலை தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி அதிகாலை வெளியானது. சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

எனவே இன்று பிறந்தநாள் காணும் பிரபாஸை மகிழ்ச்சிப்படுத்த ரசிகர்கள் பெரும் திரளாக குவிந்து அவரது கட்-அவுட்டுக்கு பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலை ஊற்றி மிகப் பெரும் செலவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here