கடப்பிதழை தற்காலிகமாக விடுவிக்ககோரி ரோஸ்மா விண்ணப்பம்

தனது மகள் நஜ்வா முகமட் நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்க சிங்கப்பூர் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை மீண்டும் தற்காலிகமாக விடுவிக்க கோரி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஜூன் 6 முதல் ஜூலை 7 வரை நான்கு வாரங்களுக்குதான் வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதிக்கும் வகையில், ஜூன் 2 ஆம் தேதி தனது சட்ட ஆலோசனை குழாம் மூலம் ரோஸ்மா நோட்டீஸை தாக்கல் செய்தார்.

ஏற்கனவே ரோஸ்மா தனது மகளது பிரசவத்தின்போது, இதுபோல விண்ணப்பம் செய்து கடப்பிதழைப் பெற்று வெளிநாடு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here