கோத்தா பாரு: மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி, கிளாந்தான் அரசு மாநில சட்டப் பேரவையைக் கலைக்கும் என்று அதன் மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19, 2022 அன்று நடைபெற்ற ள்ள 15வது பொதுத் தேர்தலுடன் இணைந்து மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு கிளாந்தான் உட்பட ஆறு மாநிலங்கள் தங்கள் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.