வயது அதிகரிக்க அதிகரிக்க தூக்கம் குறைவதற்கு என்ன காரணம்..?

உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் இதை கவனித்திருக்கக் கூடும். வீட்டில் தாத்தா , பாட்டி இருக்கிறார்கள் எனில் அவர்களை அதிகமாக தூங்கி பார்த்திருக்க மாட்டீர்கள். வீட்டில் காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளும் நபராகவும் அவர்கள்தான் இருப்பார்கள். இப்படி சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்துகொள்வதை இன்சோம்னியா (insomni) காரணமாகவும் இருக்கலாம் என்கின்றனர்.

பொதுவாக வயதானவர்கள் நடு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பார்கள் இதனாலேயே சில நேரங்களில் அவர்களின் தூக்கம் கெட்டு போகும். சிலர் நேரங்களில் திடீரென விழிப்பு வரும். பின் தூங்க நினைத்தாலும் தூக்கம் வராது. இதனால் தூங்காமல் சீக்கிரம் எழுந்து இருக்கும் வேலைகளைசெய்வார்கள். இப்படி தூங்குவதற்கு சிரப்படும் நிலையானது வயது ஏற ஏற தான் அதிகரிக்கிறது. சிறு குழந்தைளாக இருக்கும்போது படுத்தவுடன் தூங்கிவிடுவோம்.

அதேபோல் எவ்வளவு சத்தத்திலும் தூங்குவோம். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க தூங்கவே சிரமப்படுவோம். நடு இரவில் எழுந்து ஃபோன் நோண்டிக்கொண்டிருப்போம். இப்படி வயது ஏற ஏற தூக்கம் தடைப்பட நம் மூளைதான் காரணம் என்கின்றனர். அதாவது நம் மூளைதான் உடலுக்கு இந்த நேரத்தில் தூங்க வேண்டும், எழுந்துக்கொள்ள வேண்டும் என்கிற சிக்னலை கடத்துகிறது. இந்த செயல் இயற்கையாக நடக்காதபோதுதான் நம் தூக்க முறையும், எழுந்துகொள்ளும் முறையும் மாறி மாறி நிகழ்கிறது.

நம் மூளையானது சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படும். அதை வைத்துதான் நாம் பகலில் இருக்கிறோமா அல்லது இரவில் இருக்கிறோமா என்பதை உணர்கிறோம்.

ஆனால் வயதானபின் இந்த கால நேரத்தை சரியான உணரும் தன்மையை இழக்கிறார்கள். அதோடு பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழித்து அவர்களுக்கு முன்பே இவர்கள் எளிதாக சோர்வடைந்துவிடுகிறார்கள். இதனால் அனைவருக்கும் முன்பே ஓய்வு எடுக்க படுத்துவிடுவதால் காலையில் சீக்கிரம் எழுந்துக்கொள்கிறார்கள்.

மூளையிலிருந்து சுரக்கக்கூடிய மெலடோனின் ஹார்மோன் இருளை உணர உதவுகிறது. குறைந்த வெளிச்சத்தை கண்கள் உணரும்போது உடனே மூளைக்கு இந்த சிக்னல் கிடைத்து செரடோனின் ஹார்மோன் சுரக்கிறது. பின் தூக்கம் தானாக வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here