ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் தூணில் காரை மோதிய இல்லத்தரசிக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லை

நேற்று ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் தூணில் மோதி, விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநருக்கு உரிமம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காலை 10.25 மணியளவில் நடந்ததாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.

46 வயதான இல்லத்தரசி, ஓட்டிச் சென்ற வெள்ளை நிற புரோத்தோன் சாகா காருக்கு சேதம் ஏற்பட்டதைத் தவிர, காயம் ஏதும் ஏற்படவில்லை.

“ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனை வளாகத்தில் பயணிகள் இறக்கும் பிரதான பகுதியில் விபத்து நடந்தது.

முதற்கட்ட விசாரணையில், பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள பகுதியில் காரை திருப்பியபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவாக, அவர் மருத்துவமனைக்கு கட்டிடத்தின் தூணில் மோதினார்.

அவர் குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த இல்லத்தரசி உடல்நலப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here