என்னது வெறும் RM22,000-க்கு புதுக் காரா?

வாகன பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவும், காரை ஒரு எட்டாக்கனியாக எண்ணும் தரப்பினரை திருப்திப்படுத்தவும், தொழில்துறையை திகைக்க வைத்து, மக்களுக்கு உண்மையிலேயே பெரும் பரிசாக இருக்கும் காரை பெரோடுவா (Perodua) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்ணை முட்டும் விலைவாசியில், இந்த கடினமான பொருளாதார காலத்தில் RM22,000 உள்ளூர் விலையுடன் புதிய காரின் வரவு நிச்சயம் அனைவரது வயிற்றிலும் பாலைவாற்கும் என்றால் மிகையாகாது.

2023 Axia E variant வகை 5 இருக்கைகள் கொண்ட இந்தக்கார் இப்போது பெரோடுவாவின் தயாரிப்பு வரிசையில் மிகவும் மலிவு விலையில் பெறக்கூடியதாக உள்ளது, இது பெரோடுவா நிறுவனத்தின் முதல் கஞ்சில் (Kancil) மாடல் (சுமார் RM24,800 சில்லறை விற்பனை) மற்றும் 2019 Axia E variant மாடல் (சுமார் RM24,090 சில்லறை விற்பனை) போன்றவற்றை மிஞ்சியுள்ளது.

பெரோடுவாவின் கணக்கீட்டு முறையின் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏழு வருட கடன் காலத்தின் அடிப்படையில், மிகவும் சொற்பமான RM300 மாதாந்திர தவணைக்கு கட்டணமாகவும் திருப்பி செலுத்தவும் முடியும்.

பணவீக்கத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதுவரை தயாரிக்கப்பட்ட உள்ளூர் கார்களில் இது மிகவும் மலிவு விலையில் இருக்கும் என்று சொல்லலாம்.

மேலும் ஆச்சரியப்படும் விதமாக, தற்போது விற்பனையில் உள்ள சில மோட்டார் சைக்கிள்களை விட இந்த விலையில் நாம் ஒரு காரை சொந்தமாக்க வழி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here