பெந்தோங்கில் உள்ள சாமாங் நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல் போன மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
19 வயதான முகமட் அக்மல் ஹுஸ்னி முகமட் ரிட்சுவானின் உடல், இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 9.52 மணியளவில், நீர் மீட்புக் குழு உறுப்பினர்களால் கண்டெடுக்கப்பட்டது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் நேற்று (ஜூன் 15) விழுந்ததாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டார். “பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
பேராக்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில் படிக்கும் மாணவரான பாதிக்கப்பட்டவர், கடந்த புதன்கிழமை (ஜூன் 14) தொடங்கிய நான்கு நாள் முகாம் பயணத்தில் 14 மாணவர்களுடன் சென்றிருந்தார் என்று அறியமுடிகிறது.








