SUKE நெடுஞ்சாலை விபத்தில், போக்குவரத்துக்கு எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் போலீசாரிடம் சரணடைந்தார்

SUKE நெடுஞ்சாலையில், கடந்த புதன்கிழமை (ஜூன் 14)  போக்குவரத்துக்கு எதிராகச் பயணித்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காவல்துறையில் சரணடைந்தார்.

காஜாங்கில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காவல்துறையில் புகார் அளித்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

“அந்த நபர் அம்பாங்கிலிருந்து காஜாங்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார், ஆனால் வழி தவறி சுங்கை பீசி-உலு கெலாங் உயரமான நெடுஞ்சாலையில் (SUKE) போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்து, நுழைய முடிவு செய்தார். ஆனால் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர் மீது மோதினார், அனால் அவரை தவிர்க்க நினைத்த பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் பின்னர் நெடுஞ்சாலை தடுப்புசுவரில் மோதியதால், அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் “சந்தேக நபர் வீட்டிற்குச் சென்ற பின்னர், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவிய பின்னரே இந்த வழக்கு பற்றி தனக்குத் தெரியும்” என்று அவர் கூறினார்.

காயங்களுக்கு உள்ளான காரணத்தினால் சந்தேகநபர் தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது சந்தேகநபருக்கு தோள்பட்டை, கைவிரல் மற்றும் தோள்பட்டை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

“சந்தேக நபர் உட்பட மொத்தம் ஆறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஏசிபி முகமட் ஆசம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here