மெக்சிகோவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது.

மேலும், இந்த நிலநடுக்கம் கபோ சான் லூகாஸுக்கு மேற்கே 86 மைல் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here