37 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்ரில் சானி காவல்துறையில் இருந்து விடைபெறுகிறார்

  37 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா ராயல் போலீஸ் (PDRM), இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (IGP) டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று போலீஸ் படையிடம் இருந்து பிரியாவிடை பெற்றார்.

அக்ரில் சானி மற்றும் அவரது மனைவி புவான் ஸ்ரீ ஜைதுன் முகமட் ஈசா ஆகியோருக்கு பிரியாவிடை செலுத்தும் வகையில், இங்குள்ள காவல் பயிற்சி மையத்தில் (புலாபோல்) ஒரு பிரமாண்டமான  விழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி மற்றும் அவர்களது துணைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் புதிய ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மற்றும் துணை ஐஜிபி டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய விழாவில், ஏர் விங் யூனிட்டின் ஃப்ளை பாஸ்ட் மற்றும் மத்திய போலீஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சிகள், இசைக்குழுவை வழிநடத்தும் பெருமை அக்ரில் சானிக்கு கிடைத்தது.

பின்னர், அனைவரிடமும் விடைபெற்று, புலபோல் காவலர் அறையில் விருந்தினர் புத்தகத்தில் 62 வயதான அக்ரில் சானி கையெழுத்திட்டார். அக்டோபர் 3, 1961 இல், சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் பிறந்த அக்ரில் சானி 13ஆவது ஐஜிபியாக நியமிக்கப்பட்டார். டான்ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர், மே 3, 2021 அன்று ஓய்வு பெற்றார்.

ஜொகூரில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா (UTM) ஸ்கூடாய் சிவில் இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) பட்டமும், யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா (UUM) இல் முதுகலை அறிவியல் (மேலாண்மை) பட்டமும் பெற்றுள்ளார்.

அவர் பிப்ரவரி 2, 1986 இல், கேடட் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) காவல் துறையில் தனது பணியைத் தொடங்கினார். பிடிஆர்எம்மில் அவர் சேவை செய்த காலம் முழுவதும், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குநர், தெரெங்கானு மற்றும் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் மற்றும் சரவாக் காவல் ஆணையர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

சம்பிரதாய பூர்வமாக ஐ.ஜி., துணை ஐ.ஜி., பதவிகளை ஒப்படைத்த அக்ரில் சானி, போலீஸ் படையில் தலைமை மாற்றத்தில் அசாதாரணமானது எதுவும் இல்லை என்றார். நான் திறந்த மனதுடன் தலைமையை ஒப்படைக்கிறேன். இன்னும் சேவையில் இருப்பவர்கள் காவல்துறையை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

“செடியா பெர்கித்மத்” (சேவைக்குத் தயார்) என்ற எங்கள் முழக்கத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் காவல்துறையும் சமூகமும் பிரிக்க முடியாதவை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here