அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 35 ஷெல் எரிப்பொருள் விற்பனை நிலையங்களை மூடுவது குறித்து சபா பரிசீலனை

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சபா மற்றும் லாபுவானில் உள்ள மொத்தம் 35 ஷெல் சில்லறை எரிப்பொருள் விற்பனை நிலையங்களை மூடுவது குறித்து சபா பரிசீலிக்கும் என்று, அம்மாநில முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தெரிவித்துள்ளார்.

“நான் இது தொடர்பான நிலைமையை அறிந்திருக்கிறேன், மேலும் ஷெல் மலேசியா தலைவர் சித்தி ஹுரைரா சுலைமானை சந்தித்து, சபா மற்றும் லாபுவானில் பாதிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் நிலை பற்றி மேலும் அறிந்து கொள்வேன்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், ஷெல் திமூர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Shell kiosks சபா மற்றும் லாபுவானில் உள்ள எரிப்பொருள் நிலையங்களை இயக்குகிறது, நடந்துகொண்டிருக்கும் மதிப்பாய்வின் அடிப்படையில், குறித்த நிறுவனத்தின் செயல்திறனைத் தக்கவைக்க சபா மற்றும் சரவாக்கில் உள்ள பல குறைந்த வருமானம் ஈட்டும் சில்லறை விற்பனை நிலையங்களை மூடப்போவதாக உறுதி செய்துள்ளது.

மூடுவதற்காக பரிசீலனையிலுள்ள நிலையங்களில் தாவாவில் 10, செம்பூர்னாவில் 2, லாஹாட் டத்துவில் 6, சண்டாக்கானில் 12, லாபுவானில் 2 மற்றும் லிகாஸ், டெலிபோக் மற்றும் கோலா பென்யுவில் தலா ஒரு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here