அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள், 7 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

தாவாவிலுள்ள கம்போங் ஹிடயாத்,பத்து 4 ஜாலான் அபாஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் மற்றும் 7 வாகனங்கள் எரிந்து நாசமானது.

அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஒரு வீட்டில் இருந்து ஆரம்பித்த தீ, அருகில் உள்ள வீட்டுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது என்று, தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.

சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.43 மணிக்கு அழைப்பு வந்ததும் இரண்டு இயந்திரங்களுடன் 16 பேர் கொண்ட குழு அந்த இடத்திற்கு விரைந்தது.

பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளும் மிக நெருக்கமாக இருந்ததன் காரணமாக தீ வேகமாக பரவி, அவை முற்றாக எரிந்து நாசமானது என்றார்.

“அதிகாலை 2.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது ,” என்றும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இச்சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, சம்பவம் மற்றும் இழப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here