காலி பங்களாவில் சிதைந்த நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

படாவானிலுள்ள பத்து 3 1/2 ஜாலான் பெரின்சென், ஜாலான் புருங் புங்கா அபியில் உள்ள ஒரு காலி பங்களாவில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் சிதைந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை 7.10 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்தது என்று,
படாவான் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மட் கூறினார்.

உடனே அந்த இடத்திற்கு விரைந்த உறுப்பினர்கள், இரண்டு மாடி பங்களாவின் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில், ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படும், சிதைந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தை கண்டனர்.

“காலர் சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கைகளில் பச்சை குத்தியிருந்த சடலத்துடன் வேறு எந்த அடையாள ஆவணங்களும் காணப்படவில்லை” என அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என நம்பப்படும் கழிவறையில் பல இரத்த தடயங்கள் இருப்பதாகவும் அபாங் ஜைனல் கூறினார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக சரவாக் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இதுவரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த பங்களா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காலியாக இருந்ததாகவும், குற்றவியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here