ஜோகூர் சுல்தானை அவமதித்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது

ஜோகூர் சுல்தானை அவமரியாதை செய்யும் விதமாக அவதூறு கலந்த அறிக்கையை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

JDT ஃபேன்ஸ் கிளப் ஃபேஸ்புக் கணக்கு மூலம் ஜோகூர் அரசு குடும்பத்திற்கு எதிராக அவதூறான அறிக்கைகள் அடங்கிய செய்திகளை பதிவேற்றியதாகவும், பகிர்ந்ததாகவும் நம்பப்பட்டதால், 28 வயது சந்தேக நபர் அலோர் ஸ்டாரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பதிவை பதிவேற்றம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைத்தொலைபேசி மற்றும் சிம்கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்று தேசிய காவல்துறை செயலாளர் டத்தோ நூர்சியா சாதுடின் கூறினார்.

“சந்தேக நபர் இன்று முதல் ஜூன் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here