சிங்கப்பூரில் இருந்து RM100,000 மதிப்புள்ள அரிசியை ஏற்றி வந்த லோரி ஒன்று, ஜோகூரிலுள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கண்டாரில் உள்ள சோதனைச் சாவடி வளாகத்தில் (CIQ) தடுத்து வைக்கப்பட்டது.
“20 ஜம்போ சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த 18 டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான சரியான ஆவணங்கள் குறித்த லோரி ஓட்டுநரிடம் இல்லை என்றும், அதனால் 30 வயதான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக ” மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையின் (Maqis) ஜோகூர் அலுவலகம் இன்று புதன்கிழமை (ஜூன் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 22) பிற்பகல் 3 மணியளவில் அரிசி கைப்பற்றப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்குள் நுழையும் விவசாயப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் நுழைவுப் பகுதிகளில் அமலாக்கத்தை மேற்கொள்வதில் மகிஸ் உறுதியாக இருப்பதாக அவ்வறிக்கையில் அது மேலும் கூறியது.