இன்று புதன்கிழமை (ஜூலை 28) கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் உள்ளிட்ட கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
மாநிலத்தில் சரியான ஜனநாயக நடைமுறையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த உத்தியோகப்பூர்வ வாகனங்கள் ஒப்படைப்பு அமையும் என்று சனுசி கூறினார்.
காபந்து அரசாங்கத்திலுள்ள சட்டமாற உறுப்பினர்கள் மாநில தேர்தல் வரை தங்கள் தற்போதைய பணிகளைச் செய்வதற்கும் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைப்பதன் மூலம், குற்றச்சாட்டுகளில் இருந்து விலகி இருக்கலாம் என்று தாம் எண்ணுவதாகவும், தேர்தல் முழுவதும் பிரச்சாரத்திற்கு அரசாங்க சொத்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிற கட்சிகளைச் சேர்ந்த எங்கள் நண்பர்களையும் நாம் ஊக்குவிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.










