மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் இந்த சனிக்கிழமை (ஜூலை 1) கலைக்கப்படுகிறது.
நெகிரி செம்பிலான் ஆளுநர் மரியாதைக்குரிய துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிரால் குறித்த தேதி அங்கீகரிக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் கூறினார்.
“மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு இடமளிக்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான பத்திரத்தில் இன்று காலை நெகிரி செம்பிலான் ஆளுநர் கையெழுத்திட்டு, ஒப்புதலளித்தார், “இறைவன் கிருபையால் சட்டமன்றம் ஜூலை 1ஆம் தேதி கலைக்கப்படுகிறது ,” என்று அவர் இன்று விஸ்மா நெகிரியில் செய்தியாளர்களிடம் கூறினார்.









