பெண்ணுக்காக தகராறா? சண்டையில் ஈடுபட்டபவர்களை தேடும் போலீசார்

ஜார்ஜ் டவுன்: இன்று அதிகாலை  ஜாலான் பிண்டால் தாலியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு அருகே ஆண்கள் குழு ஒன்று சாலையோரம் சண்டையிடும் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது.

அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவமானது. ஒரு பெண்ணுக்காக இரண்டு ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

ஒரு நிமிடம் மற்றும் 12 வினாடிகள் கொண்ட கிளிப்பில், ஒரு குழுவினர் ஒரு நபரை அடிப்பது, குத்துவது மற்றும் மிதிப்பது ஆகியவை காணப்பட்டன. சிலர் சண்டையை கலைக்க முயன்றனர்.

வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் சோஃபியன் சாண்டோங் கூறுகையில், சம்பவம் குறித்து காவல்துறை இன்னும் புகாரினை பெறவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here