போதைப்பொருள் வழக்கு; RM1.8 மில்லியன் மோசடி ஆகியவை குறித்து நோட்டீஸா? போலீசார் மறுப்பு

கோலாலம்பூர்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் 1.8 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு விசாரணைக்கு உதவ முன்வருமாறு ஒரு பெண்ணிடம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுவதை காவல்துறை மறுத்துள்ளது.

கோலாலம்பூர் காவல் துறையினர் முகநூலில் ஒரு அறிக்கையில், சந்தேகநபர் இருப்பது குறித்த அறிவிப்பு தவறானது என்று கூறியுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வைரல் நோட்டீஸின் அடிப்படையில், 24 வயதான பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் 1.8 மில்லியன் ரிங்கிட் பணத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இரண்டு மணி நேரத்திற்குள் ஒத்துழைக்கவில்லை என்றால், போலீசார் கைது வாரண்ட் பிறப்பித்து, 45 நாட்களுக்கு காவலில் வைப்பதுடன், இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்குவார்கள்.

உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் 1972 இன் படி சந்தேக நபர் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here