அதிகாலையில் பெய்த கனமழைக்கு பின் பினாங்கில் திடீர் வெள்ளம்

பினாங்கு தீவின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஜார்ஜ்டவுன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நான்கு மணி நேர இடைவெளியில் பெய்த மழையால் பினாங்கின் தாழ்வான பகுதிகளான ஜாலான் பி. ராம்லீ, கம்போங் மக்காம், ஜாலான் டத்தோ கெராமாட் மற்றும் நகரின் மையப்பகுதியில் உள்ள பல சாலைகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பினாங்கு நகராண்மைக் கழகத்தின் (MBPP) முகநூல் பக்கத்தின்படி, தஞ்சோங் புங்காவில் உள்ள ஜாலான் லோஹ் போ ஹெங், பயா தெருபோங்கில் தாமான் புக்கிட் சௌஜானா ஆகிய இடங்களில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

“இருப்பினும், MBPP அவசரக் குழு மற்றும் அமலாக்கத் துறை பணியாளர்கள் விரைவாக அவ்விடத்திற்கு சென்று, போக்குவரத்து சீராக செல்ல சாலைகளை சுத்தம் செய்தனர்” என்று அது தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு நீடித்த இந்த கனமழை, பின்னர் சற்று குறைவடைந்தது, இருப்பினும் மழைவீழ்ச்சி 20 மிமீ இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், பல மாநிலங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என்றும் மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here