முன்னாள் கணவர் கத்தியால் குத்தியதில் பெண் மரணம்

தனது முன்னாள் கணவர் கத்தியால் குத்தியதால் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால் அந்த பெண் பாசீர் தும்போவில் உள்ள தாமான் டேசா தாருல்நைமில் உள்ள குறித்த வீட்டில், இரண்டு மாதங்களாகவே வாடகைக்கு இருப்பதால், அங்கு அவரை யாருக்கும் நெருக்கமாக தெரியவில்லை.

அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண், 40 வயது மதிக்கத்தக்க முன்னாள் கணவரால் குத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதோடு, பெண்ணின் முன்னாள் கணவர் தனது வயிற்றில் தன்னைத் தானே குத்திக் கொண்டதாக நம்பப்படுகிறது.

அத்தோடு அவர் தற்போது ராஜா பெரம்புவான் ஜைனாப் 11 மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தனது மருமகளுடன் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்ததாகக் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் அண்டைவீட்டில் வசிக்கும் ஐனி என்பவர் கூறும்போது, குறித்த பெண் ஒரு நட்பான நபர், ஆனால் அந்தப் பெண் காலை முதல் மாலை வரை தண்ணீர் போத்தல் விற்பதால் நான் அவளைப் பற்றி பெரிதாக அறியவில்லை, அத்தோடு நானும் வேலை செய்கிறேன்” என்று அவர் இன்று சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது கூறினார்.

சம்பவத்திற்கு முன், அவரும் சில அயலவர்களும் வீட்டில் இருந்து உரத்த இசை ஒலிப்பதைக் கேட்டதாக ஐனி கூறினார்.

“கடந்த 19 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து வருகின்றபோதும், இந்த சம்பவம் இங்கு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.

60 வயதில் ஜா என்று மட்டுமே அழைக்கப்பட விரும்பும் பக்கத்து வீட்டுக்காரர், காவல்துறை மற்றும் வீட்டின் முன் பல கார்களைப் பார்த்த பிறகு இந்த சம்பவம் பற்றி அறிந்ததாகக் கூறினார்.

“சில நிமிடங்களுக்குப் பிறகு, போலீசார் உடலை கருப்பு பிளாஸ்டிக்கில் எடுத்துச் செல்வதை நான் பார்த்தேன், அப்போதுதான் கத்தியால் குத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் இறந்ததை நான் அறிந்தேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை இங்குள்ள பாசீர் தும்போவில் உள்ள தாமான் டேசாவில் தண்ணீர் போத்தல் வியாபாரியான பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவரால் குத்திக் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here