கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பிரதமர் திடீர் விஜயம்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) உள்ள குடிநுழைவு மற்றும் சுங்க கவுண்டர்களுக்கு திடீர் விஜயம் செய்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் நுழைவு மையங்களின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் நுழைவு மையங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான தாவை இருப்பதை நான் கண்டேன்” என்று பிரதமர் கூறினார்.

உள் நுழைவு கவுண்டர் மற்றும் புறப்பாடு கவுண்டர் ஆகிய இரு இடங்களிலும் தினசரி நடவடிக்கைகள் குறித்து பணியில் இருக்கும் உறுப்பினர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களிடம் பல கேள்விகளையும் என்னால் கேட்கவும் முடிந்தது என்றும் பிரதமர் கூறினார்.

சமீபத்திய சீன சுற்றுலா பயணிகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில், அதிகாரிகளால் முழுமையான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன்.

மேலும் அது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் வரும் புதன்கிழமை அமைச்சர்கள் சபை கூட்டத்தில் நடைபெறும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுமுகமான செயற்பாட்டை பாதிக்கும் தவறுகள் இருப்பின், அதுபோன்ற நடவடிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

இன்ஷா அல்லாஹ் அனைத்து தரப்பினருக்கும் சரியான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் தேசிய விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நிலைகள் எப்போதும் மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் அந்தப் பதிவின் மூலம் உருகியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here