செரம்பன்: இங்குள்ள ரெம்பாவ் மாவட்ட காவல் நிலையத்தில் 58 வயது காவலர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.
சனிக்கிழமை (ஜூலை 1) மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசாப் தெரிவித்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இறந்தவர் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் என்றும் அவர் கூறினார் காவல்துறை விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று டிசிபி அகமது ஜாஃபிர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.










