நாட்டில் டிங்கி காய்ச்சலின் பாதிப்பு குறைந்துள்ளது- சுகாதார அமைச்சகம்

ஜூன் 18 முதல் ஜூன் 24 வரையிலான 25 வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME25) டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 226 சம்பவங்கள் அல்லது 8.0 சதவீதம் குறைந்து 2,582 சம்பவங்களாக பதிவாகியுள்ளது, இது முந்தைய வாரத்தில் பதிவான 2,808 வழக்குகளுடன் ஒப்பிடும்போது குறைவடைந்து வருவதைக் காட்டுகிறது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ME25ல் டிங்கி காய்ச்சலினால் ஏற்படும் சிக்கல்களால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.

24 வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME24) டிங்கி கொசு பரவும் இடங்களான 110 இடங்களுடன் ஒப்பிடும்போது குறித்த எண்ணிக்கை 130 இடங்களாக அதிகரித்துள்ளது, அதாவது சிலாங்கூரில் 93 இடங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 22 இடங்கள், கெடா, 6, பினாங்கு மற்றும் சபாவில் தலா 3 , மற்றும் பெர்லிஸ், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங்கில் தலா ஒரு இடமும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here