சிரம்பான்:
இன்று அதிகாலை 5 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (வடக்கு திசை) கிலோமீட்டர் 285.5 இல், சுற்றுலாப் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் மொத்தம் 22 பேர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளதாக நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி, ஷாருதீன் முகமட் டின் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும்,இந்தோனேசிய பெண் பயணி எனவும், காரில் பயணித்த இருவர் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற சுற்றுலாப் பேருந்துடன் புரோத்தோன் வீரா கார் மோதியதன் மூலம் விபத்து ஏற்பட்டது என்றும், விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்றய நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என்றும் என்றும் ஷாருதீன் கூறினார்.










