கோபத்தில் மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்; மஞ்சோங்கில் சம்பவம்

­ஈப்போ: போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதால் கோபமடைந்த 28 வயது இளைஞன் தனது மனைவியை தீ வைத்து எரித்ததால், 33 வயது பெண் உயிரிழந்த சம்பவம் மஞ்சோங் அருகே உள்ள கம்போங் பாருவில் திங்கள்கிழமை (ஜூலை 10) நடந்துள்ளது.

மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நோர்டின் அப்துல்லா கூறுகையில், இந்த சம்பவத்திற்கு முன்பு, அவர் போதைப்பொருள் பாவனையாளர் என்று கூறி அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தவறான புரிதல் இருந்தது.

சந்தேக நபரின் இளைய சகோதரரிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது. சந்தேக நபர் தனது மனைவியை தீ வைத்து எரித்துவிட்டதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இன்று (ஜூலை 12) இறந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் லுமுட் அருகே உள்ள உணவகத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சந்தேகநபர் இன்று மஞ்சோங் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு அவரை ஏழு நாள் போலீஸ் விசாரணைகளுக்கு உதவ விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here