சுமார் இரண்டரை இலட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் பறிமுதல் -ஒருவர் கைது

ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள ஒரு வளாகத்தில், ஜோகூர் பாரு பிராந்தியம் II மரைன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் RM241,000 மதிப்புள்ள போலி மதுபானங்கள், அவற்றை பதப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் நடந்த சோதனையில், 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் துணை போலீஸ் தலைவர் டிசிபி எம். குமார் தெரிவித்தார்.

இந்த வளாகம் போலி மதுபானங்களை பதப்படுத்தி, பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

“சந்தேக நபரான டிரான்ஸ்போர்ட்டர், ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் நேற்று முதல் ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135 (1) (d) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here