ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் அவரின் மனைவி கலீதாவும் இஸ்தானாவில் கடந்த திங்கட்கிழமை சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கையும் அவரது துணைவியார் திருமதி லீயையும் சந்தித்தனர்.
பிரதமர் லீ வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஜோகூர் முக்கிய நுழைவாயிலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

“ஜோகூருடன் எங்களுக்கு சிறப்பான உறவு உள்ளது. ஆழமான இரத்த சொந்தங்கள், திடமான பொருளியல் உறவுகளால் நாங்கள் இணைக்கப்பட்டுள்ளோம். கோவிட்-19 பெருந்தொற்றின்போது இவை நீடித்து நிலைத்தன. சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நான் விரும்புகிறேன்,” என்று சிங்கப்பூர் பிரதமர் லீ கூறினார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று, ஜூலை 10 முதல் 12ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.








