தைப்பிங்கில் 22 மாதப் பெண் குழந்தைக்கு போதைப்பொருள் சாதகம்; தாய் கைது

தைப்பிங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) ஒரு வயது மற்றும் 10 மாத வயதுடைய குறித்த பெண் குழந்தை, கட்டுப்படுத்த முடியாத செயல்களை செய்தது, அத்தோடு இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்ததால், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரஸ்லாம் அப்துல் ஹாமிட் கூறினார்.

“குறித்த சம்பவத்திற்கு முன்னர், அந்தக் குழந்தையின் 22 வயதான தாய், தனது பாட்டியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கச் சென்றிருந்தபோது, குழந்தையை அனுப்பியுள்ளார்.

அப்போது அந்தக் குழந்தை தூங்க விரும்பியதாகவும், ​​அது தொடர்ந்து அழ ஆரம்பித்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

“எனவே அந்தக் குழந்தையை தைப்பிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு குறித்த குழந்தைக்கு மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது ,” என்று அவர் கூறினார்.

“இது தொடர்பில் உடனடியாக ஒரு மருத்துவ அதிகாரி காவல்துறைக்கு எச்சரித்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.

குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளது என்று ஏசிபி ரஸ்லாம் தெரிவித்தார்.

பின்னர் அந்தக் குழந்தையின் தாயாருக்கும் மெத்தம்பேட்டமைன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே இந்த விஷயம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தருவதற்கு முன்வருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here